December 3, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

பள்ளிகளை திறந்த ஒரு வாரத்தில் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

சண்டிகர்:
தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் அவரவர் வீடுகளில் தடுமைப்படுத்தப்பட்டு அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா 2வது அலையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா பரவல் குறித்து சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு ஆர்வமுடன் வருகை புரிந்தனர்.
இந்நிலையில், பஞ்சாப்பில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில், லுதியானா, அபோகார், நவன்சாகர், அமிர்தசரஸ் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 அரசுப் பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் அவரவர் வீடுகளில் தடுமைப்படுத்தப்பட்டு அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களிடையே தொற்று பரவுவதை கண்காணிப்பதற்காக மாநில சுகாதாரத்துறை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து தினமும் பத்தாயிரம் பரிசோதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.